இன்னும், மனிதனுக்கு துன்பம் ஏற்பட்டால், அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக); அல்லது, உட்கார்ந்தவனாக; அல்லது, நின்றவனாக (அதை நீக்கித் தரும்படி) நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிடும்போது அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று சென்று விடுகிறான். எல்லை மீறி(ய பாவி)களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன.