யார் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!” என்று கூறுவீராக! மாறாக, அவர்களில் அதிகமானோர் (படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறிய மாட்டார்கள்.