அல்லது, மற்றொரு முறை உங்களை அவன் அதில் (-கடலில்) மீண்டும் அழைத்து சென்று, (கப்பலை) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்கடித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா? (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதனை முன்னிட்டு உங்களுக்காக நம்மிடம் பழிதீர்ப்பவரை நீங்கள் காணமாட்டீர்கள்.