இன்னும், மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அது ஓர் இடையூறாகும். எனவே, மாதவிடாயில் பெண்களிடமிருந்து (-அவர்களுடன் உடலுறவு வைப்பதிலிருந்து) விலகிவிடுங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்காதீர்கள். அவர்கள் (மாதவிடாய் நின்று, குளித்து) முழுமையாக சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள்.’’ நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம் மீளுபவர்கள் மீது அன்பு வைக்கிறான். இன்னும், பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான்.