நிராகரிப்பவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையே அலங்காரமாக(த் தோன்றும்படி) செய்யப்பட்டிருக்கிறது. ஆதலால், அவர்கள் (ஏழைகளாக இருக்கும்) நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். ஆனால், (நம்பிக்கையாளர்களான) இறையச்சம் உள்ளவர்களோ மறுமையில் அவர்களைவிட (எவ்வளவோ) மேலாக இருப்பார்கள். மேலும், அல்லாஹ் விரும்புகின்ற (இ)வர்களுக்குக் கணக்கின்றியே வழங்குவான்.