இன்னும், நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். என்றாலும், நிச்சயமாக அவன் (இந்த) பூமியில் நிரந்தர (சுக)ம் தேடினான். அவன் தன் ஆசையைப் பின்பற்றினான். ஆகவே, அவனுடைய உதாரணம் நாயின் உதாரணத்தைப் போன்றது. நீர், அதைத் துரத்தினாலும் அது நாக்கைத் தொங்கவிடும். நீர் அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்கவிடும். இதுவே, நம் வசனங்களைப் பொய்ப்பித்த மக்களின் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக சரித்திரங்களை விவரிப்பீராக.