பிறகு, அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு, ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். ஆகவே, விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக.