Ingia
Ingia
Ingia
Chagua Lugha

Al-Kahf 18:101 الذين كانت اعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا ١٠١

Ukurasa 304 · Juzuu 16

ٱلَّذِينَ
كَانَتۡ
أَعۡيُنُهُمۡ
فِي
غِطَآءٍ
عَن
ذِكۡرِي
وَكَانُواْ
لَا
يَسۡتَطِيعُونَ
سَمۡعًا
١٠١
(அவர்கள்) எனது நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டு விட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்.
Endelea Kusoma

Soma Tafsir

Ibn Kathir (Abridged)

Hell will be displayed before the Disbelievers on the Day of Resurrection

Allah tells us what He will do to the disbelievers on the Day of Resurrection. He will show Hell to them, meaning He will bring it forth for them to see its punishment and torment before they enter it. This will intensify their

…

Hell will be displayed before the Disbelievers on the Day of Resurrection

Allah tells us what He will do to the disbelievers on the Day of Resurrection

…
Tazama Tafsir

Soma katika Muktadha

83. (நபியே!) துல்கர்னைனைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். ‘‘அவருடைய சரித்திரத்தில் (இருந்து) உங்களுக்கு (பயனளிக்கும்) அறிவுரையை ஓதிக் காண்பிக்கிறேன்'' என்று கூறுவீராக. 84. நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்து வளமிக்க வசதி வாய்ப்பையும் அளித்திருந்தோம். ஒவ்வொரு பொருளையும் (தமது இஷ்டப்படி) செய்யக்கூடிய வழியையும் நாம் அவருக்கு அளித்திருந்தோம். 85. அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். 86. சூரியன் மறையும் (மேற்குத்) திசையை அவர் அடைந்த பொழுது சேற்றுக் கடலில் சூரியன் மறைவதை(ப் போல்) கண்டார். அவ்விடத்தில் ஒருவகை மக்களையும் கண்டார். (நாம் அவரை நோக்கி) ‘‘துல்கர்னைனே! நீர் (இவர்களைத் தண்டித்து) வேதனை செய்யவும், அல்லது அவர்களுக்கு நன்மை செய்யவும் (இரண்டுக்கும் முழு சுதந்திரம் உமக்கு அளித்திருக்கிறோம்)'' என்று கூறினோம். 87. ஆகவே அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்களில்) எவன் (என் கட்டளையை மீறி) அநியாயம் செய்கிறானோ அவனை நாம் (தண்டித்து) வேதனை செய்வோம். பின்னர், அவன் தன் இறைவனிடம் கொண்டு போகப்பட்டு அவனும் அவனை மிக்க கடினமாக வேதனை செய்வான்'' என்றார். 88. ‘‘எவன் நம்பிக்கை கொண்டு (நாம் கூறுகிறபடி) நல்லதை செய்கிறானோ அவனுக்கு (இறைவனிடத்திலும்) அழகான நற்கூலி இருக்கிறது. நாமும் நம் வேலைகளில் சுலபமான வேலைகளையே (செய்யும்படி) அவனுக்குக் கூறுவோம். 89. பின்னர், அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்பற்றி நடந்தார். 90. அவர் சூரியன் உதிக்கும் (கிழக்குத்) திசையை அடைந்த பொழுது சில மக்களைக் கண்டார். அவர்கள் மீது சூரியன் உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதையும் கண்டார். அவர்களுக்கும் சூரியனுக்கும் இடையில் நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்த வில்லை. (ஆடையணிந்தோ, வீடு கட்டியோ, சூரிய வெப்பத்தைத் தடுத்துக் கொள்ளக் கூடிய ஞானம் அவர்களிடம் இல்லை.) 91. (அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம். 92. பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். 93. (அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு முன்னால் மக்கள் சிலரைக் கண்டார். அவர்கள் பேச்சை (எளிதில்) புரியக்கூடியவர்களாக இருக்கவில்லை. 94. அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) ‘‘துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீர் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் உமக்கு சேகரம் செய்யலாமா?'' என்று கேட்டார்கள். 95. அதற்கவர், ‘‘என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது,) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக்கொண்டு எனக்கு உதவிசெய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு தடுப்பை (சுவரை) எழுப்பிவிடுகிறேன்'' என்றும், 96. ‘‘நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்றும் கூறி, ‘‘(அவற்றைக் கொண்டுவந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரை அதை ஊதுங்கள்'' என்றார். (அதன் பின்னர்) ‘‘செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்'' என்றார். 97. ‘‘பின்னர், அதைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது'' (என்று கூறினார்). 98. (இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) ‘‘இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும்போது, இதை(யும்) தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி உண்மையாக இருக்கிறது!'' என்று கூறினார். 99. அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்றுசேர்த்து விடுவோம். 100. கண்டிப்பாக, அந்நாளில் நரகத்தை நிராகரிப்பவர்களுக்கு முன்பாக்குவோம். 101. (அவர்கள்) எனது நல்லுபதேசங்களைப் பார்க்காது அவர்களுடைய கண்களுக்குத் திரையிடப்பட்டு விட்டன; ஆகவே, அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற சக்தியற்று விட்டனர்.

- Abdul Hameed Baqavi

Endelea Kusoma

Maelezo na Tafakari

Huna maelezo au tafakari yoyote kuhusu aya hii.

Notes placeholders

Endelea Kuungana na Qur'ani ❤️

Vikumbusho vifupi vyenye maana vinavyoweka upya maisha yako, kukusaidia kutafakari na kuendelea kushikamana na Qur'ani.

Soma, Sikiliza, Tafuta, na Tafakari Qur'ani

Quran.com ni jukwaa linaloaminika na linalotumiwa na mamilioni duniani kote kusoma, kutafuta, kusikiliza na kutafakari kuhusu Qur'ani katika lugha tofauti. Inatoa huduma za tarjuma, tafsiri, vikariri, tarjuma ya neno kwa neno, na zana za ufahamu wa kina, kuifanya Qur'ani ipatikane na kila mtu.

Kama mbinu ya Sadaqah Jariyah, Quran.com imejitolea kusaidia watu kuunganishwa kwa kina na Qur'ani. Ikiungwa mkono na Quran.Foundation , shirika lisilo la faida la 501(c)(3), Quran.com inaendelea kukua kama rasilimali ya bila malipo na yenye thamani kwa wote, Alhamdulillah.

Chunguza
Nyumbani
Redio ya Qur'ani
Wasomaji
Kutuhusu
Watengenezaji
Sasisho za Bidhaa
Maoni
Msaada
Changia
Miradi Yetu
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Miradi isiyo ya faida inayomilikiwa, kusimamiwa, au kufadhiliwa na Quran.Foundation
Viungo Maarufu
Dua kutoka Quran
Aya ya Quran ya Siku
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
Ramani ya tovutiFaraghaSheria na Masharti
© 2026 Quran.com. Haki Zote Zimehifadhiwa
Changia