Log masuk
Log masuk
Log masuk
Pilih Bahasa

Ghaafir (Al-Mu'min) 40:11 قالوا ربنا امتنا اثنتين واحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل الى خروج من سبيل ١١

Halaman 468 · Juz 24

قَالُواْ
رَبَّنَآ
أَمَتَّنَا
ٱثۡنَتَيۡنِ
وَأَحۡيَيۡتَنَا
ٱثۡنَتَيۡنِ
فَٱعۡتَرَفۡنَا
بِذُنُوبِنَا
فَهَلۡ
إِلَىٰ
خُرُوجٖ
مِّن
سَبِيلٖ
١١
அதற்கவர்கள், ‘‘எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கிறோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?'' என்று கேட்பார்கள்.
Teruskan Membaca

Baca Tafsir

Ibn Kathir (Abridged)

The Regret of the Disbelievers after They enter Hell

Allah tells us that the disbelievers will feel regret on the Day of Resurrection, when they enter Hell and sink in the agonizing depth of fire. When they actually experience the unbearable punishment of Allah, they will hate themselves with the utm

…

The Regret of the Disbelievers after They enter Hell

Allah tells us that the disbelievers will feel regret on the Day of Resurrection, when they enter

…
Lihat Tafsir

Baca dalam Konteks

10. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து விட்டார்களோ, அவர்களை நோக்கி, ‘‘இன்றைய தினம் நீங்கள் உங்கள் ஆத்மாவை (நிந்தித்துக்) கோபிப்பதை விட, (உங்கள் மீது) அல்லாஹ்வுடைய (நிந்தனையும்) கோபமும் மிகப் பெரியதாகும். ஏனென்றால், நீங்கள் நம்பிக்கையின் பக்கம் அழைக்கப்பட்ட சமயத்தில், அதை நிராகரித்து விட்டீர்கள்'' என்று அவர்களை நோக்கி சப்தமிட்டுக் கூறப்படும். 11. அதற்கவர்கள், ‘‘எங்கள் இறைவனே! இருமுறை நீ எங்களை மரணிக்கச் செய்தாய்; இருமுறை நீ எங்களுக்கு உயிர் கொடுத்தாய். நாங்கள் எங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு விண்ணப்பம் செய்கிறோம். ஆகவே, (இதில் இருந்து நாங்கள்) வெளிப்பட ஏதும் வழி உண்டா?'' என்று கேட்பார்கள். 12. (அதற்கு இறைவன்,) ‘‘உங்களுக்கு இ(த்தண்டனை வந்த)தன் காரணமாவது: அல்லாஹ் ஒருவன்தான் என்று கூறினால், அதை நீங்கள் மறுத்தீர்கள். அவனுக்கு எவரும் இணை உண்டு என்று கூறப்பட்டால், அதை நீங்கள் நம்பினீர்கள்! ஆதலால், (இன்றைய தினம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் இவ்வேதனை) மிகப் பெரியவனும், மேலானவனுமாகிய அல்லாஹ்வுடைய தீர்ப்பே!'' (என்று கூறுவான்). 13. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு அறிவித்து, வானத்தில் இருந்து உங்களுக்கு உணவுகளையும் இறக்கிவைக்கிறான். (ஒவ்வொரு விஷயத்திலும்) அவனையே முன்நோக்குபவர்களைத் தவிர, மற்றெவரும் (இதைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெற மாட்டார்கள். 14. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே வழிப்பட்டு, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள். 15. அவன் மிக்க உயர்ந்த பதவிகள் உடையவன், அர்ஷுக்கு சொந்தக்காரன். (தன்னைச்) சந்திக்கும் நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக, தன் அடியார்களில் தான் விரும்பியவர்களின் மீது தன் கட்டளையை வஹ்யி மூலம் அவன் இறக்கிவைக்கிறான். 16. (மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த ஒரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், ‘‘எவருடைய ஆட்சி? (என்று கேட்டு, அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!'' (என்று பதில் கூறப்படும்). 17. இன்றைய தினம் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அவை செய்த செயல்களுக்குத் தக்க கூலி கொடுக்கப்படும். இன்றைய தினம் ஒரு அநியாயமும் நடைபெறாது. அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்(டுத் தீர்ப்பளிப்)பதில் மிகத் தீவிரமானவன். 18. (நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக் கொள்ளும். அநியாயம் செய்பவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்கமாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்கமாட்டார். 19. (மனிதர்களின்) கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்கள் மறைப்பவற்றையும் அல்லாஹ் நன்கறிவான். 20. ஆதலால், முற்றிலும் நீதமாகவே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். இவர்கள் (இறைவனென) அழைக்கும் அல்லாஹ் அல்லாதவையோ (அதற்கு மாறாக) எத்தகைய தீர்ப்பும் கூறமுடியாது. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.

- Abdul Hameed Baqavi

Teruskan Membaca

Nota dan Refleksi

Anda tidak mempunyai sebarang nota atau renungan tentang ayat ini.

Notes placeholders

Kekal Terhubung dengan Al-Quran ❤️

Peringatan ringkas yang bermakna untuk menetapkan semula, merenung dan kekal terhubung dengan al-Quran.

Baca, Dengar, Cari, dan Renungkan Al-Quran

Quran.com ialah platform dipercayai yang digunakan oleh berjuta-juta orang di seluruh dunia untuk membaca, mencari, mendengar dan merenung Al-Quran dalam pelbagai bahasa. Ia menyediakan terjemahan, tafsir, bacaan, terjemahan perkataan demi perkataan, dan alat untuk kajian yang lebih mendalam, menjadikan al-Quran boleh diakses oleh semua orang.

Sebagai Sadaqah Jariyah, Quran.com berdedikasi untuk membantu orang ramai berhubung secara mendalam dengan al-Quran. Disokong oleh Quran.Foundation , sebuah organisasi bukan untung 501(c)(3), Quran.com terus berkembang sebagai sumber percuma dan berharga untuk semua, Alhamdulillah.

Navigasi
Halaman Utama
Radio Al-Quran
Qari
Tentang Kami
Pemaju (Developers)
Kemas kini produk
Maklum balas
Bantuan
Derma
Projek Kami
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Projek tanpa untung yang dimiliki, diurus atau ditaja oleh Quran.Foundation
Pautan yang di gemari
Doa-doa daripada Al-Quran
Ayat Al-Quran Hari Ini
Ayatul Kursi
Surah Yaseen
Surah Al Mulk
Surah Ar-Rahman
Surah Al Waqi'ah
Surah Al Kahf
Surah Al Muzzammil
Peta lamanPrivasiTerma dan Syarat
© 2026 Quran.com. Hak cipta terpelihara
Sumbangan