Log masuk
Log masuk
Log masuk
Pilih Bahasa

Fussilat 41:38 فان استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسامون ۩ ٣٨

Halaman 480 · Juz 24

فَإِنِ
ٱسۡتَكۡبَرُواْ
فَٱلَّذِينَ
عِندَ
رَبِّكَ
يُسَبِّحُونَ
لَهُۥ
بِٱلَّيۡلِ
وَٱلنَّهَارِ
وَهُمۡ
لَا
يَسۡـَٔمُونَ ۩
٣٨
ஆகவே (நபியே!) இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.) உங்கள் இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய வானவர்)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை.
reading-goal:continue-reading

Baca q-and-a.tafsir

Ibn Kathir (Abridged)

From among the Signs of Allah

Here Allah reminds His Creation of His power, and that He is the One Who has no equal, and He is Able to do all things. Allah's saying;

وَمِنْ ءَايَتِهِ الَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ

(And from among His signs are the night and the day, and the sun and the m

…

From among the Signs of Allah

Here Allah reminds His Creation of His power, and that He is the One Who has no equal, and He is Able to do all things. A

…
Lihat tafsirs

Baca related-content

33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து(த் தானும்) நற்செயல்களைச் செய்து ‘‘நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் ஒருவன்'' என்றும் கூறுகிறாரோ, அவரைவிட அழகான வார்த்தை கூறுபவர் யார்? 34. நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆதலால், நபியே! தீமையை) நீர் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அவ்வாறாயின், உமது கொடிய எதிரியை அதே சமயத்தில் உமது உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர். 35. பொறுமையுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள். மேலும், பெரும் பாக்கியமுடையவர்களைத் தவிர மற்றெவரும் இதை அடைய மாட்டார்கள். 36. (நபியே!) ஷைத்தானுடைய ஓர் ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கோருவீராக! நிச்சயமாக அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன். (ஆதலால், அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்.) 37. ‘‘இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனுடைய (வல்லமையை அறிவிப்பதற்குரிய) அத்தாட்சிகளில் உள்ளவை. ஆகவே, மெய்யாகவே நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குபவர்களாக இருந்தால் சூரியனுக்கும் (சிரம் பணியாதீர்கள்;) சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள். இவற்றை படைத்தவன் எவனோ அவனுக்கே சிரம் பணியுங்கள்'' (என்று நபியே! கூறுவீராக.) 38. ஆகவே (நபியே!) இவர்கள் கர்வம் (கொண்டு இறைவனை வணங்காது விலகிக்) கொள்வார்களாயின், (அதனால் அவனுக்கு ஒரு நஷ்டமும் இல்லை.) உங்கள் இறைவனிடத்தில் உள்ளவர்(களாகிய வானவர்)கள் இரவும் பகலும் அவனைத் துதி செய்து புகழ்ந்துகொண்டே இருக்கின்றனர். (இதில்) அவர்கள் சோர்வடைவதே இல்லை. 39. (நபியே! பயிர்கள் கருகி) பூமி வெட்ட வெளியாக இருப்பதை நீர்காண்பதும் மெய்யாகவே அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாகும். அதன் மீது நாம் மழையை இறக்கினால், அது (செடி கொடிகளால்) பசுமையாகி வளர்கிறது. (இவ்வாறு இறந்து போன) பூமியை எவன் உயிர்ப்பிக்கிறானோ அவன்தான் மரணித்தவர்களையும் மெய்யாகவே உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் (அனைத்தின் மீதும்) பேராற்றலுடையவன். 40. நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களில் தப்பர்த்தங்களை(த் தங்கள் தீய செயல்களுக்கு ஆதாரமாக)க் கற்பிக்கிறார்களோ, அவர்களுடைய செயல்களில் (ஒன்றுமே) நிச்சயமாக நமக்குமறைந்து விடாது. மறுமையில் நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது பயமற்றவனாக(ச் சொர்க்கத்திற்கு) வருபவன் மேலானவனா? (மனிதர்களே!) நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள். நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அவன் உற்று நோக்குகிறான். 41. நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை நிராகரிக்கிறார்களோ (அவர்கள் மறுமையில் தங்கள் நிலைமையை உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால்) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். 42. இதற்கு முன்னும் சரி, இதற்குப் பின்னும் சரி உண்மைக்கு மாறான ஒரு விஷயமும் (திரு குர்ஆனாகிய) இதை (அணுகவே) அணுகாது. மிக்க புகழும் ஞானமும் உடையவனால் (இது) இறக்கப்பட்டது. 43. (நபியே!) உமக்கு முன் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டது எதுவோ, அதைத் தவிர (வேறொன்றும் புதிதாக) உமக்குக் கூறப்படவில்லை. (ஆகவே, இவர்கள் கூறும் நிந்தனைகளைப் பற்றி நீர் கவலைப்படாதீர்.) நிச்சயமாக உமது இறைவன் (நல்லவர்களுக்கு) மிக மன்னிப்புடையவன், (தீயவர்களுக்கு) துன்புறுத்தும் வேதனையுடையவன். 44. இதை அரபி அல்லாத (வேறு) மொழியில் உள்ள குர்ஆனாக இறக்கி வைத்திருந்தால், (இந்த மக்காவாசிகள்) இதனுடைய வசனங்கள் (நமது அரபி மொழியில்) விவரித்துக் கூறப்பட்டிருக்க வேண்டாமா? என்றும், இதுவோ அரபி அல்லாத (வேறு) மொழி (நாமோ அதை அறியாத அரபிகள்) என்றும் கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக: ‘‘இது (அவர்களுடைய அரபி மொழியில் இருப்பதுடன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேரான வழியாகவும், (சந்தேக நோயுள்ள உள்ளங்களுக்கு) நல்லதொரு பரிகாரமாகவும் இருக்கிறது. எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுடைய காதுகளுக்கு செவிடாகவும், அவர்களுடைய பார்வையை போக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் (உமது சமீபத்திலிருந்த போதிலும்) வெகு தொலை தூரத்திலிருந்து அழைக்கப்படுகிறார்கள் (போல் இருக்கின்றது).

- Abdul Hameed Baqavi

reading-goal:continue-reading

Nota dan Renungan

reflection-not-available

Notes placeholders

Kekal Terhubung dengan Al-Quran ❤️

Peringatan ringkas yang bermakna untuk menetapkan semula, merenung dan kekal terhubung dengan al-Quran.

Baca, Dengar, Cari, dan Renungkan Al-Quran

Quran.com ialah platform dipercayai yang digunakan oleh berjuta-juta orang di seluruh dunia untuk membaca, mencari, mendengar dan merenung Al-Quran dalam pelbagai bahasa. Ia menyediakan terjemahan, tafsir, bacaan, terjemahan perkataan demi perkataan, dan alat untuk kajian yang lebih mendalam, menjadikan al-Quran boleh diakses oleh semua orang.

Sebagai Sadaqah Jariyah, Quran.com berdedikasi untuk membantu orang ramai berhubung secara mendalam dengan al-Quran. Disokong oleh Quran.Foundation , sebuah organisasi bukan untung 501(c)(3), Quran.com terus berkembang sebagai sumber percuma dan berharga untuk semua, Alhamdulillah.

Navigasi
Halaman Utama
Radio Al-Quran
Qari
Tentang Kami
Pemaju (Developers)
Kemas kini produk
Maklum balas
Bantuan
Derma
Projek Kami
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran.AI
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Projek tanpa untung yang dimiliki, diurus atau ditaja oleh Quran.Foundation
Pautan yang di gemari
Doa-doa daripada Al-Quran
Ayat Al-Quran Hari Ini
Ayatul Kursi
Surah Yaseen
Surah Al Mulk
Surah Ar-Rahman
Surah Al Waqi'ah
Surah Al Kahf
Surah Al Muzzammil
Peta lamanPrivasiTerma dan Syarat
© 2026 Quran.com. Hak cipta terpelihara
Sumbangan